துபாயில் சர்வதேச மகளிர் தின
சிறப்பு விருதுகள் 2012
துபாய் : துபாயில் 10 வது சர்வதேச மகளிர் தின சிறப்பு விருதுகள் வழங்கும் விழா
மார்ச் 08ம் தேதியன்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 பெண்கள்
தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மகளிர் தினத்தன்று விருதுகள் வழங்கி
கெளரவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு விருது சமூகத்தில் வேறுபட்ட கலாச்சார பின்னணி கொண்ட பெண்களை
அங்கீகரித்து அவர்களை பெருமைப்படுத்துகிறது. இவ்விழாவிற்கு தலைமை சிறப்பு
விருந்தினராக துபாய் விமான நிலைய முன்னாள் மேலாளர் ஃபாத்திமா காசீம் கலந்து
கொண்டார்.
மேலும் கெளரவ விருந்தினர்களாக துபாய் பரோடா வங்கி நிர்வாக அதிகாரி சி.வி ராமமூர்த்தி,
சுலைஹா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சுலைஹா தாவுத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2011ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு விருதுகளுக்கு
01) சுலைஹா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சுலைஹா தாவுத்,
02) ஆசியாட்டிக் பிரிண்டிங் இயக்குனர் ஆனந்தி ராமசந்திரன்,
03) பயண மாற்று வழி நிறுவனர் ஹாலா காசிம்,
04) வயலின் கலைஞர் சுமதி ஆனந்த்,
05) கல்ஃப் நியூஸ் வீடியோ கிராஃபர் சுனிதா மேனன்,
06) டாக்டர் பாட்டியா கிளினிக் மேலாளர் டாக்டர் ஷிவானி ஷர்மா,
07) யுஏஇ தமிழ்ச்சங்கம்
நிறுவனர் ஸ்ரீ கங்கா ரமேஷ்,
08) சென்னை ஜுவல்லர்ஸ் பிரியா
சிங்க்,
09) தலைமை ஆசிரியர் லலிதா சுரெஷ்,
10) சாதி குரூப் குஸும் தத்தா,
11) பிரைமரி ஸ்கூல் குர்ஷீத் துமாசியா
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துவானி குழும நிறுவனர் எம்.ஜி.உமா, லயன்ஸ் கிளப் விஜயன்
மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
யுஏஇ தமிழ்ச்சங்கம்