UAE Tamil Sangam (UTS) Neha Swaminathan wins Sheikh Hamdan Award for Excellence VIEW PHOTOS

யு.எ.இ. தமிழ் சங்கத்தின் செல்வி நேகா சுவாமிநாதன் கல்விக்கான ஷேக் ஹம்தான் விருது பெற்றார்.

யு.எ.இ. தமிழ் சங்கத்தின் பொருளாளர் திரு. சுவாமிநாதன் மற்றும் கீதா சுவாமிநாதன் அவர்களின் மகள், செல்வி நேகா சுவாமிநாதன் தில்லி பிரைவேட் பள்ளியில் VI grade பயின்று வருகிறார். இந்த வருடத்தின் சிறந்த படிப்பு மற்றும் பலகலை பிரிவுக்குமான ஷேக் ஹம்தான் விருதை அவர் பெற்றிருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதற்கான விருது வழங்கும் விழா 26 ஏப்ரல் 2011 அன்று மாலை 7 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. மேன்மை தங்கிய ஹிஸ் ஹைனஸ் ஷேக் ஹூமைத் பின் ரஷித் அல் நுயுவமி- அஜ்மான் சூப்ரீம் கவுன்சிலின் தலைவரும், அஜ்மான் ஆட்சியாளர் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. ஹூமைத் முகம்மது ஒபைத் அல் குத்தமி அஜ்மான் கல்வி அமைச்சர் அவர்களும் வருகை தந்து சிறப்புற்ற நிகழ்ச்சியில் நம் செல்வி விருது பெற்றது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு உயரிய தருணம்.

இந்த விருதை பெற செல்வி நேகா சுவாமி நாதனும், பெற்றோரும் அவர்கள் தங்கை செல்வி. லோகிதா சுவாமி நாதன் அவர்களும் 2 வருடங்களுக்கு மேலாக கஷ்டப்பட்டு உழைத்தனர். இவர்கள் நம் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள், நம்மவர்கள் என சொல்லிக் கொள்வதில் நம் எல்லோருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி.

இதற்கான விருதை HH Shaikh Hamdan Bin Rashid Al Maktoum, Deputy Ruler of Dubai and Minister of Finance. வழங்கினார்   

இந்த ஷேக் ஹம்தான் விருது என்பது, கல்வி மட்டுமல்லாது, கலை, விளையாட்டு, சமூக ஆர்வம் என பல துறைகளிலும் பரிசீலிக்கப்பட்டு, தீவிர நோக்கலுக்கு பின்னர் பரிந்துரை செய்யப்படுவதாகும். திரை கடலோடி திரவியம் தேடு எனத்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், ஆனால் இன்றோ, நம் தமிழ் மண்ணில் பிறந்து, விருதுகளையும் வெற்றிக் கொடியையும் கடல் கடந்து நாட்டுவது தமிழனாய் பிறந்த நம் எல்லோருக்குமே பெருமை.

வாசிக்கும் நம் அன்பு உள்ளங்களுக்கு நம் குழந்தைகளும் இப்படி ஒரு சாதனை செய்ய வேண்டுமே. என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லையே என யோசிக்கிறீர்களா. கவலை வேண்டாம், நம் தமிழ்ச் சங்கம் அதற்கான அத்தனை உதவிகளையும் செய்ய மகிழ்வுடன் காத்திருக்கிறது. இதற்கு தேவையான வழிமுறைகள், உபகரணங்கள் மற்றும் ஆலோசனை இவைகளை வழங்கி உங்கள் குழந்தையையும் சாதனையாளராக்க யு.எ.இ. தமிழ்ச் சங்கம் தயாராக இருக்கிறது.

உங்கள் மேலான தொடர்புக்கு,இந்த சுட்டியில் தொடர்பு கொள்ளவும்.
Contact Us

விருது பெற்ற செல்வி. நேகா சுவாமி நாதன் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் வாழ்த்தி விட்டு, அடுத்த ஆண்டில் நம் தமிழ் குழந்தை செல்வங்கள் இன்னும் இன்னும் விருது பெற யு.எ.இ. தமிழ்ச்சங்கம் ஆசிக்கிறது. தங்கள் ஆதரவையும் வேண்டுகிறது.

உங்களுக்கு சேவை செய்ய கட்டளையிடுங்கள், யு.எ.இ.  தமிழ்ச்சங்கம் காத்திருக்கிறது.

 

UAE Tamil Sangam (UTS) Neha Swaminathan wins Sheikh Hamdan Award for Excellence VIEW PHOTOS

Sheikh Hamdan Award for Excellence in Academics and co-curriculars - Date : 26-April-2011, Tuesday @ 7pm.

Ms. Neha Swaminathan daughter of UTS Treasurer Mr. Swaminathan and Mrs. Geetha Swaminathan studying VI grade in Delhi Private School, Sharjah won the Sheikh Hamdan Award for Excellence in Academics and co-curriculars for the year 2010. The award was presented on 26-April-2011, Tuesday at 7.00pm in grand ceremony hosted by His Highness Shaikh Humaid Bin Rashid Al Nuaimi, Supreme Council Member and Ruler of Ajman, the event was also attended by Humaid Mohammad Obaid Al Qutami, Minister of Education at the Dubai International Exhibition and Convention Centre.

In a glittering ceremony, 208 winners including students, educators and researchers - were honoured by Shaikh Hamdan Bin Rashid Al Maktoum, Deputy Ruler of Dubai and Minister of Finance. Dubai won the maximum number of awards.

Achieving this honorable Hamdan Award is not an easy task. Ms. Neha Swaminathan, her parents and her little sister Ms. Lohita Swaminthan worked for more than 2 years to get this award. UTS (UAE Tamil Sangam) is proud to have Mr. Swaminathan and family in our team.

The Sheikh Hamdan Award will be given based on Academics, Cultural, Extra Curricular, Social Activities etc.,

We as a Tamilians should be proud to get such an award in a foreign country. Congratulations to Ms. Neha Swaminathan.

Dear parents we are very sure that your child can also get this award.
Please start giving more attention to your children in Academics, Cultural, Extra Curricular Activities, Social Services etc., UAE Tamil Sangam is ready to provide all the material, guidance & support to achieve such a distinguished award.  You can Contact Us any time.

From next year we expect lot of students to achieve this from our UAE Tamil Sangam family.

Kindly give your wishes (Click Here) blessings & comments to Ms. Neha Swaminathan & family, Click Here


Achievers in UAE education recognised
Dubai wins most education accolades at the Hamdan Bin Rashid Al Maktoum Awards
Gulf News - Published: 21:24 April 26, 2011
Hamdan Bin Rashid Al Maktoum
http://gulfnews.com/news/gulf/uae/education/achievers-in-uae-education-recognised-1.799643