வணக்கம். நம் UAE தமிழ்ச் சங்கத்தின் பயணத்தில் இன்னொரு வெற்றியின் மைல் கல்.  VIEW PHOTOS

ஆம் அன்பு தோழமைகளே! அமீரக மண்ணில் நம் மக்களுக்கு, அவர்தம் சோர்வு நீக்கி, உற்சாகமும் ஊக்கமும் தரும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதே இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும், அந்த நாள், 4 பிப்ரவரி, 2011 மகிழ்ச்சியான ஒரு தினமாக நினைவுகளில் பதிக்கப்பட்டது.

பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிகரமாய் பரிசுகளும் வழங்கி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. முதன் முறையாக, இறகுப்பந்து போட்டி பல பிரிவுகளாக நடத்தப் பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தது தமிழ்ச்சங்கம். அன்றைய தினத்திலேயே, முக வண்ணம் பூசி, குழந்தைகளையும், பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியாகிய உடனே, ஏராளமான வரவேற்பும், பங்கு பெறும் ஆவலுமாய் நம் உறுப்பினர்கள் நம்மை அணுகினார்கள். இத்தகைய ஆதரவு நம்மை மென்மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்க தூண்டுகிறது என சொன்னால் மிகையாகாது. குழு அமைப்பதிலும், நேரம் குறிப்பதிலும் மிகவும் வெளிப்படையான முறைகள் கையாளப்பட்டு, பங்கு பெறும் அத்தனை விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளையும் சார்ஜா வரவேற்க்கப்பட்டு, பயிற்சிகளும் நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டது.

ஆடவர் இரட்டை / பெண்கள் இரட்டை / கலப்பு இரட்டை என பகுக்கப்பட்டு, போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 3ம் தேதி பயிற்சி போட்டிகள் அமைக்கப்பட்டு, இரவு 9 மணி முதல் 12.30 மணி வரை நடை பெற்றன. இப்பயிற்சி போட்டிகளில் பங்கு பெற, அமீரகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் நேரங்களை பாராமல் உறுப்பினர்கள் வந்தது அவர்களின் ஆர்வத்தையே குறிக்கிறது.

திரு. மல்லிகார்ஜூன், திருமதி. கீதா, ஸ்ரீராம், திருமதி. காமாட்சி அவர்கள் இந்த விளையாட்டை ஒருங்கிணைத்து நடத்தினர். இவர்களுக்கு உறுதுணையாக திரு.பிரபு, திருமதி. மாரீஸ்வரி பிரபு, திரு. பாலகிருஷ்ணன், திரு. சாகுல் அகமது, திரு. அண்டனி நிக்சன் அனைவரும் சிறப்பாக செயலாற்றினார்கள். எல்லைக்கோட்டு ஆட்களும், ஸ்கோர் குறிப்பெடுத்தவர்களுக்கும் நம் பிரத்யேக நன்றிகளை பதிக்கிறோம்.

தாங்கள் அனைவரும் அறிந்ததே, நம் அமீரகத்தில் 2ம் தேதி வரை, கனமழையும், புழுதிக் காற்றும் நிலவியது. என்றாலும் ஆச்சரியகரமாக 3ம் தேதி மதியம் தொடங்கி, நிகழ்ச்சியின் இறுதி வரை, மிக சாதகமான வானிலை வாய்த்தது என்றால், இறைவன் நம்மோடு என சொல்லத்தானே தோன்றுகிறது.

4 பெப்ரவரி 2011, அமீரக நினைவுப் பக்கங்களில், நெஞ்சை விட்டு அகலாத மகிழ்ச்சியின் ஒரு நிகழ்வு.

திட்டமிட்டபடி, முதல் போட்டி மிகச் சரியாக 10 மணிக்கு காலையில் தொடங்கியது. அதிலிருந்து மிக துல்லியமாக, நேரம் கடைபிடிக்கப்பட்டு, இறுதி போட்டி, இரவு 8.15 மணிக்கு நடைபெற்றது. பங்கு பெற்ற அத்தனை விளையாட்டு வீர் வீராங்கனைகளின் பேராதரவே இதற்கு மிக முக்கிய காரணம். இத் தருணத்தில் அவர்களுக்கு நாம் நன்றியை பதிவு செய்து கொள்வோம்.

முக வண்ணம் பூசும் அற்புத நிகழ்வை முதன் முறையாக நடத்தி நாம் சாதனை படைத்தோம். 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர்.
திரு.ஷோபன் மற்றும் திருமதி ஜமுனா ஷோபன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

இறகுப்பந்து போட்டிகள் மட்டுமல்லாது, பல் சுவை விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நம் உறுப்பினர்கள் ஆர்வமாய் பங்கு பெற்றும் அகமகிழ்ந்தும் இருக்க கொண்டாட்டங்கள் களை கட்டின.

குழந்தைகளுக்கென பாசிங் த டாய், கொல கொலயா முந்திரிக்கா, தொடர் ஓட்டம், வண்ணங்கள், வேடிக்கை இறகுப் பந்து, கொகோ என 2 வயது முதல் 15 வயது வரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

15 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிதவேக நடை, அடுத்தவனை அலேக்கா தூக்கு, குதியாட்டம், கொகோ என நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான 15 வயதிற்கு மேற் பட்டோருக்கு குப்பி நிரப்புதல், குவளை பாலன்சிங், பந்து எரிதல், பிஸ்கட் தின்னுதல் மற்றும் கொகோ எனவும் திருமதி ஸ்ரீரங்கா ரமேஷ் மற்றும் திருமதி.சித்ரா பிராஸ்பர் அவர்களால் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சி நடத்தியதிலும், வெற்றி பெற்றவர்களுக்கும் இரண்டாம் இடத்தில் இருப்பவர்களுக்கும் பரிசுகள் வாங்குவதிலும் இவர்கள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டுக்குறியது. உறுதுணையாக இருந்த திரு.பத்மராஜ் மற்றும் திரு.அருண் குமாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒருங்கிணைப்பில் உதவியாக
திருமதி.சௌம்யா, திருமதி.கோகிலா, திருமதி. கீதா சுவாமிநாதன், திருமதி.விஜயா, திருமதி.காயத்ரி, திருமதி.அனிதா முத்து, திரு.நந்தகுமார், திரு.மகாதீர், திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீமான், திரு.ரவி, திரு.ராம்குமார் மற்றும் UTS ஆதரவுக் குழு (UTS ஸ்கவுட்ஸ் மற்றும் UTS கைட்ஸ்).

சுவையான தேனீரும் மதிய உணவும் அளித்து மூன் லைட் ரெஸ்ட்டாரண்ட் விழாவுக்கு அணி சேர்த்தது. குலுக்கல் சீட்டின் பரிசு வழங்கி பேக் டூ பேக் சூப்பர் மார்க்கெட் அல் நாதா வழங்கியது.

போட்டியின் நினைவுக் கோப்பைகள் வழங்கிய
திரு.பிராஸ்பர் அவர்களுக்கு பிரத்யேக நன்றிகள். திரு.ராம்குமார், திரு.தலவை மற்றும் குழுவினருக்கு சுறுசுறுப்பாய் இயங்கி நெறிப்படுத்தி வாலெண்டியர்களாக அவர்கள் ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது.

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற பிரார்தித்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பதற்காக தங்கள் சென்னை பயணத்தை மாற்றி அமைத்த
திரு.பிரபு மற்றும் திருமதி. மாரீஸ்வரி பிரபு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அபுதாபியில் இருந்து குடும்பத்துடன் வருகை தந்து, நம் சங்கத்திற்கான தன் ஆதரவையும் அன்பையும் வெளிக்காட்டிய
திரு.சங்கர் அவர்களுக்கு நன்றி.

பங்கெடுத்துக் கொண்ட மொத்த குழுக்கள்
ஆடவர் இரட்டை : 22 அணிகள் (44 வீரர்கள்)
பெண்கள் இரட்டை: 12 அணிகள் (22 வீராங்கனைகள்)
கலப்பு இரட்டையர்கள் : 22 அணிகள் (44 வீர வீராங்கனைகள்)

ஆடவர் இரட்டை (MEN's DOUBLES)

WINNERS

Mr. Alagappan & Mr. Mohammed Anwar

RUNNERS-UP

Mr. Sriram & Mr. Durga Ramesh

பெண்கள் இரட்டை  (WOMEN's DOUBLES)

WINNERS

Mrs. Kamakshi & Mrs. Geetha Bala

RUNNERS-UP

Mrs. Geetha Kathir & Mrs. Geetha Malli

கலப்பு இரட்டை (MIXED DOUBLES)

WINNERS

Mr. Sriram & Mrs. Kamakshi Sriram

RUNNERS-UP

Mr. Prabhu & Mrs. Mareeswari Prabhu


4th Feb 2011 another Mile Stone has been achieved in our UTS journey.  VIEW PHOTOS

Vanakkam. Another Mile Stone has been achieved in our UTS journey.
First time in Tamil Sangam's history
Shuttlecock Tournament was conducted along with many other games and Face Painting.

UAE Tamil Sangam (UTS) oraganized Shuttlecock Tournament on 4th Feb 2011. Men's Doubles / Women's Doubles / Mixed Doubles. Exciting Games and Prizes for Children, Ladies and Gents was also organized along with face painting.

UTS had put up an announcement regarding the registration and got huge response from their members. The teams Pairing & Timing lot was conducted in a very open manner. All the players were invited to Sharjah and the lot for Mixed, Men and Women's doubles was conducted and recorded for further use and clarification.

UTS organized a Practice Session on 3rd Feb 2011 in Sharjah from 9pm to 12.30am.  For practice too people came from all over UAE and stayed tilll 12:30am which shows the interest and involvement of UTS Members.

Mr. Mallikarjunm, Mrs. Geetha, Mr. Sriram, Mrs. Kamaktshi coordinated for our Tournament.  Supported by Mr. Prabhu and Mrs. Mareeswari , Mr. Balakrishnan, Mr. Shahul Ahmed & Mr. Antony Nixon -  A job well done by all of them. Thanks to all the Line men and Scorers.

Till 2nd of February 2011 heavy rain and Sand storm in UAE.  But from 3rd Afternoon till the end of the event the climate was excellent which shows that God is great and is always with us.

4th Feb 2011 another Mile Stone has been achieved in our UTS journey.

As per our schedule we started our 1st Match exactly 10:00am from that we strictly followed the timing, the Final match was played at 8.15pm. We got excellent cooperation from all the players. Thanks to all.

Face Painting : 1st time in Tamil Sangam's history, we arranged Face Painting during the event. More than 30+ children and few other members also enjoyed the Face Painting. Thanks to Mr. Shoban and Mrs. Jamuma Shoban who organized the Face Painting for UTS.

Apart from our Shuttlecock Tournament we had Exciting Games and Prizes for Children, Men and Women which was enjoyed by one and all.

For Children 2-15 we had Passing the Toy, Mulberry bush (Kola kolaya mundrika), Running relay, Colours, Fun shuttlecock & Kho Kho
For Men 15 & Above | Slow Walk, Carry your partner, Hopping & Kho Kho
For Ladies 15 & Above - Fill the bottle, Balancing the can, Throw the ball, Biscuit eating & Kho Kho

These games were organized by Mrs. Sreeganga Ramesh & Mrs. Chitra Prosper who had taken lot of efforts in choosing each and every game and in buying gifts for all the winners and runners. Thanks to their lovely coordination.

Thanks to Mr. Padmaraj and Mr. Arun Kumar who helped conduct these games.

The games were supported by Mrs. Sowkya, Mrs. Kokila, Mrs. Geetha Swaminathan, Mrs. Vijaya, Mrs. Gayathri, Ms. Anitha Muthu, Mr. Nandakumar, Mr. Mahathir, Mr. Karthikeyan, Mr. Sreeman, Mr. Ravi, Mr. Ramkumar and UTS Support Team (UTS SCOUTS /UTS GUIDES).

Lunch and Tea was provided. Lunch from Moon Light Restaurant, Dubai.
Raffle Draw gift was given by BackToBack Supermarket, Al Nadha

Special thanks to Mr. Prosper who organized the wonderful Trophies. 

Thanks to all the Players, Volunteers, Well-Wishers.  Special thanks to Mr. Ram Kumar, Mr. Thalavai and team (Al Quoz) volunteers.
Thanks to Mr. Prabhu and Mrs. Marreswari Prabhu who prepone their flight from Chennai only to coordinate and play in our Tournament.
Thanks to Mr. Sanker and family who came all the way from Abu Dhabi just to show their support for UTS.

TOTAL TEAMS AND PARTICIPANTS

Men's Doubles                        : 22 Teams (44 Players)
Women's Doubles
                 : 12 Teams (22 Players)
Mixed Doubles
                       : 22 Teams (44 Players)

MEN's DOUBLES

WINNERS

Mr. Alagappan & Mr. Mohammed Anwar

RUNNERS-UP

Mr. Sriram & Mr. Durga Ramesh

WOMEN's DOUBLES

WINNERS

Mrs. Kamakshi & Mrs. Geetha Bala

RUNNERS-UP

Mrs. Geetha Kathir & Mrs. Geetha Malli

MIXED DOUBLES

WINNERS

Mr. Sriram & Mrs. Kamakshi Sriram

RUNNERS-UP

Mr. Prabhu & Mrs. Mareeswari Prabhu

Thank you very much for each and everyone who made the 4th Feb 2011 Fun Day a memorable day for UTS.  Excellent Support. Excellent Involvement. 
I am sure without your valuable support it wouldn’t have been possible to have run this event.  Expecting your valuable support at all times.

When you get time please give us your valuable suggestion / feedback and comments.

Thanks and Regards
Ramesh Viswanathan / Prosper / Swaminathan / Senthil Velan and team
UAE Tamil Sangam

VIEW PHOTOS