வணக்கம். VIEW PHOTOS     -  English Version

அன்புடன் - லாரன்ஸ் பிரபா

அனைவருக்கும் வணக்கம்

15 ஏப்ரல் 2011 அன்று UAE தமிழ்ச் சங்கம் இன்னும் ஒரு மறக்க முடியாத நினைவை நமக்கு அள்ளித் தந்தது. UAE தமிழ்ச் சங்கம் வழங்கிய நம்பிக்கை சுவரங்கள் 2011 எதிர்பாராத வரவேற்ப்பும், எண்ணிலடங்கா பார்வையாளர்களுமாய் இனிதாய் அமைந்தது. இதை ஒரு சரித்திர சாதனை என சொன்னால் கூட மிகையாகாது.

வரவேற்ப்புரை வழங்கி திரு.விக்னேஷ் ரவி அவர்கள் குத்து விளக்கு ஏற்ற திருமதிகளை அழைத்தார். அழைப்புக்கிணங்கி திருமதி. ராதா வெங்கட்ராமன், திருமதி. ஜனனி, திருமதி. வசந்தா, திருமதி. கீதா சுவாமி நாதன், திருமதி. சித்ரா ப்ராஸ்பர், திருமதி. கங்கா ரமேஷ் அவர்கள் ஏற்றி வைக்க இனிதுடன் விழா துவங்கியது.

செவிக்கினிய நம் தமிழ்தாய் வாழ்த்து. திருமதி.சௌக்கியா அர்விந்த், திருமதி. கோகிலா அருண், திருமதி. விஜயா ரவி, திருமதி.விஜி பாலு, திருமதி. பிரியா விஜய் அவர்களால் பாடப்பட்டது. வந்தவர்களை வரவேற்று திருமதி. சித்ரா ப்ராஸ்பர் சொல்லுரை வழங்கினார்

அதன் பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி. ஸ்ரீ கங்கா மற்றும் திரு. செந்தில் வேலன் அவர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டது.

இந்த நிகழ்ச்சி நல்லமுறையில் நடந்தேற உறுதுணை செய்த நல்ல இதயங்களின் பெயர்கள். திரு.கார்த்திக் மற்றும் திருமதி. கீதா சுவாமி நாதன் அவர்களால் வாசிக்கப்பட நிகழ்ச்சி தொடர்ந்தது.

முதல் 20 நிமிடங்கள் வாத்தியங்களின் இசைக் கோர்வை அரங்கை நிறைத்தது. கீ போர்ட், டிரம்ஸ், எல்க்ட்ரானிக் பேட், தபேலா, வயலின் மற்றும் குரல்கள் இணைந்து ஒரு ராக ராஜாங்கம் நடந்தது. அதுவே வந்தவர்களை இசையால் நிரப்பி, மனதை கொள்ளை கொண்டது. தமிழ்ச் சங்க உறுப்பினர் திரு.செல்வின் இதை நான்கே நாட்களில் ஒருங்கிணைத்தது அற்புதம். இத்தகைய சிறப்பான நிகழ்ச்சி அமைத்து தந்த திரு.செல்வின் அவர்களுக்கு நம் பிரத்யேக நன்றிகள் உரித்தாகட்டும்.

அதனை தொடர்ந்து, திரு. கார்த்தி (அல் நூர் மாணவர்) காதல் ஓவியம் திரைப்படத்தின் சங்கீத ஜாதி முல்லை பாடலை பாட, பார்வையாளர்கள் தத்தம் இருக்கை விட்டு எழுந்து பாராட்டினர். ஆட்டிஸம் பாதிக்கப்பட்டாலும், இசை ஆதிக்கம் செய்த அவரது திறமைக்கு கிடைத்த பாராட்டு. அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

இசையை தொடர்ந்து நடனங்கள் ஆரம்பித்தது. கற்பனை செய்ய முடியாத அளவில் அல் நூர் அமைப்பின் குழந்தைகள் ஆடிய நடனம் 25 நிமிடங்கள் நம்மை கண்ணீரால் நிறைத்து மனதை கொள்ளை கொண்டது. இவர்கள் சாதாரணர்கள் அல்ல, இறைவனின் குழந்தைகளே என மனதார ஏற்றுக் கொள்ளவும் வைத்தது. பார்வையாளர்களின் ஆதரவும், அன்பும் இவர்களை மென்மேலும் வளர்க்கும் என்பது நிச்சயம். திரு. பிராஸ்பர் மற்றும் திருமதி. சித்ரா ப்ராஸ்பர் வெகுமதிகள் வழங்கி நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தார்கள்.

நடனங்கள் தொடர்ந்து, நம் அன்பிற்குரிய கேப்டன் Ramesh Viswanathan உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி நடந்தேற ஒத்துழைத்த அனைத்து நிறுவனங்களுக்கும், ஸ்பான்சர்சுக்கும், சங்க உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். முந்தைய ஆண்டில் நடந்த நம்பிக்கை சுவரங்கள் 2010 நினைவு கூர்ந்து, நம்பிக்கை சுவரங்கள் 2011 இன்னும் சிறப்பாகும் என நம்பிக்கை கொள்வதாய் குறிப்பிட்டார்.

UAE தமிழ் சங்கம் இசை முன்னோடிகள் திரு.எம்.எஸ். விஸ்வ நாதன், திரு. இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடனங்கள் அமைத்து 2 உறுப்பினர்களை கொண்டு நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தது, நடன இயக்குனர் திருமதி. ஸ்ரீ கங்கா ரமேஷ்.

நிகழ்ச்சியை தன் பலகுரல் வல்லமையால் கலகலப்பாக்கினார், திரு. மிம்மிக்கிரி செந்தில். சவுண்ட் எபக்ட், பலகுரல் என நிகழ்ச்சியை களை கட்டினார். வாழ்த்துக்கள் செந்தில்

திறமைகளை வளர்க்க என்றும் ஆர்வம் கொண்ட நம் தமிழ்ச் சங்கம், திரு.குணா மற்றும் திருமதி. அனுஷா அவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக களம் இறக்கி நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தது.

ஆஹா.. என்ன அற்புதம். திரைப்பட புகழ் திரு. கிங்காங் அவர்களின் நடனமும் திரு செந்தில் அவர்களுடன் இணைந்த நிமிடங்களும் அரங்கை சிரிப்பால் கொள்ளை கொண்டது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் எனும் பழமொழியை நிஜமாக்கி நம்மை இலகுவாக்கிய அவர்களின் மேடை ஆளுமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

திரு கோகுல் நாத் அவர்களின் பல்சுவை நடனம் பார்வையாளர்களின் கரகோஷத்தை பெற்றது. அதில் அற்புதம் என்னவென்றால் அவர் ஏற்பாடு செய்திருந்த உடன் நடனமாடுபவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாமல் போக, அவசரமாய் நம் தமிழ் சங்க உறுப்பினர் செல்வி சுவேதா நடனமாட ஒப்புதல் தந்தார். 1 மணி நேரமே பயிற்சி என்றாலும் அவர்கள் படைத்த கலை விருந்து நம்மை வெகுவாக மகிழ்வித்தது.

இதன் பின்னர் நிஜ நாயகர்கள் திரு.லாரன்ஸ் அவர்களின் நடனக் குழுவினர் 3 பாடலுக்கு நடனமாடினர். கால்கள் இழந்தால் என்ன, முயற்சி இல்லாமலா போனது என அவர்கள் தங்கள் குறைகளுக்கு விடுத்த சவால் நம் கண்ணை நீராலும் மனதை மனித நேயத்தாலும் நிறைத்தது. மனிதன் நினைத்தால் முடியும், உடல் குறை ஒரு பொருட்டல்ல என உலகுக்கு சொன்ன அந்த நடன நிமிடங்கள் புனிதமானவை. உன்னதமானவை, மேன்மையானவை. இந்த மொத்த குழுவுமே முதல் முறையாக கடல் தாண்டி வந்திருப்பதாகவும், மகிழ்ச்சி கொள்வதாகவும், திரு.லாரன்ஸ் அவர்கள் பேசியபோது குறிப்பிட்டார். நம் கேப்டன் ரமேஷ் அவர்களையும் அனைத்து உறுப்பினர்களையும் நன்றியுடன் தன் உரையில் நினைவு கூர்ந்தார்.

முன்னமே குறிப்பிட்டது போல, திறமைகளை வளர்க்கும் நினைப்பில் திரு. ஹரி மற்றும் திரு. அருண் குமார் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக தொடர்ந்தனர்.

திரு. கார்த்தி(அல் நூர் மாணவர்) அவர்களால் வந்தே மாதரம் பாடப்பட நிகழ்ச்சி இனிதாக நிறைவுற்றது.

நன்றியுரை திரு. சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்து இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நம்பிக்கை சுவரங்கள் என்ற பெயரை யு.எ.இ. தமிழ்ச்சங்கம் காப்புரிமைக்கு விண்ணப்பித்து Trade Mark காக ஆக்கிக் கொள்ள‌ வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.

குலுக்கல் போட்டி நடத்தப்பட்டு, அதில் வசூலான தொகை முழுவதும் திரு.லாரன்ஸ் அவர்களின் குழுவிடம் கொடுக்கப்பட்டது. திரு. குமார் மற்றும் திருமதி. உமா தங்கள் பங்களிப்பை லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்டுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து நடனக் குழுவினருக்கும் அன்பளிப்பு வழங்கி மகிழ்ந்தனர் தியாகராஜா பொறியியல் கல்லூரியின் மதுரை பிரிவை சார்ந்த திரு. சிவா மற்றும் குழுவினர்.

திரு.குமார் (ICWC), திரு. நாராயணன் (பேங்க் ஆப் பரோடா), மருத்துவர் நாராயணன். தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி அமைய காரணமான திருமதி. ஸ்ரீகங்கா, திரு. ப்ராஸ்பர், திருமதி. சித்ரா ப்ராஸ்பர், திரு. சுவாமிநாதன், திருமதி. கீதா சுவாமிநாதன் திரு. செந்தில் வேலன், திரு.குணா, திரு. சோபன் பாபு, திருமதி. ஜனுமா ஷோபன், திரு. ஸ்ரீராம், திருமதி. காமாட்சி ஸ்ரீராம், திரு. கதிர் வேல், திருமதி. கீதா கதிர்வேல், திரு. பாலாஜிராம், திருமதி. கீதா பாலா, திரு. ரவி, திருமதி. விஜயா ரவி, திரு. அர்விந்த், திருமதி. சௌக்கியா அர்விந்த், திரு. அருண், திருமதி. கோகிலா அருண், திரு. கார்த்திக் திரு. இம்ரான், திரு. ராம்குமார், திரு. பாலு, திரு. சலாகுதீன், திரு. சுந்தர் தம்பி, பிரத்யேக நன்றிகள் திரு. பாலா பாலகுமார் (அற்புதமான UTS Presentation பகிர்தலுக்கு), திரு. கண்ணன் (Photograph), திரு. பாலாஜி Detects Crew Cleaning & Security Services L.L.C

தன் நெஞ்சின் ஆழத்திலிருந்து நம் கேப்டன் ரமேஷ் சொன்னது இன்னும் ரீங்காரம் செய்கிறது. அதுவே அவர்து வெற்றியையும் வெற்றியையும் சொல்லும் ரகசிய தாரக மந்திரமாய் இருந்தது. எனது குழுவில்லாமல் நானில்லை, என் குழுவில்லாமல் நாங்களுமில்லை.

அன்புடன்
லாரன்ஸ் பிரபா
யு.ஏ.இ. தமிழ்ச்சங்கம்

VIEW PHOTOS

UAE Tamil Sangam's Nambikkai Swarnagal 2011, 15th April 2011 is an unforgettable day in our lives. Unbelievable Event, Excellent Crowd and Great show. It is a big record and we together have created another history in UAE.

Invite speech was given by Mr. Vignesh Ravi and he invited all the ladies for lamplighting
Lamplighting - Mrs. Radha Venkatraman, Mrs. Janani, Mrs. Vasantha, Mrs. Geetha Swaminthan, Mrs. Chitra Prosper and Mrs. Ganga Ramesh
Thamiz Thai Vazthu Mrs.Sowkya aravind, Mrs. Gokila arun, Mrs. Vijaya ravi, Mrs. Viji Balu and Mrs. Priya vijay
Welcome speech was given by Mrs. Chitra Propser.

Stage was then handed over to Anchors Mrs. Sreeganga, Mr. Senthil Velan

Mr. Karthik and Mrs. Geetha Swaminathan announced Nambikkai Swarangal 2011 sponsors details.

Show started with Jugalbandhi for 20 mints (Keyboard, Drums, Electronic Pads, Thabala, Voilin and Vocal) 1st time in a Tamil Sangam using Members. Mr. Selvin (UTS Member) took this as a challenge and trained the entire team for just 4 days. It was grand success. Special thanks to Mr. Selvin and the entire team.

After Jugal bandhi Mr. Karthik (Autistic, student from Al Noor) sung Sangeetha Jathi Mullai. He got standing ovation from the entire auditorium.

After Mr. Kathik's song UTS organised unbelievable dance performance by Al Noor Special Needs children (God's children). Excellent Colorful dance. Any normal person cannot dance for more than 10 mints but our Al Noor dancers danced for 25 mints continuously. It was really amazing. They got standing ovation from the entire auditorium. The show was blessed with responsive audience . For entire Al Noor student gifts were sponsored and given by Mr. Propser / Mrs. Chitra Propser.

After Al Noor dance Mr. Ramesh Viswanathan Captain of UTS gave a speech. In his speech he thanked all other associations, sponsors and entire UTS Team and the Audience. He also mentioned about Nambikkai Swarangal 2010 and said Nambikkai Swarangal 2011 will beat Nambikkai Swarangal 2010.

UAE Tamil Sangam had arranged 2 members children dance both choreographed by Mrs. Sreeganga. First one was a tribute to Illayaraja & A.R. Rahman and second dance was a tribute for M.S. Viswanathan.

Mr. Mimicry Senthil did 3 slots (Mimicry, Sound Effect and Variety).

UTS decided to give stage for more talents so the 1st 2 anchors (Mrs. Sreeganga, Mr. Senthil) was replaced by the second set of anchors Mr. Guna & Mrs. Anusha.

Mr. Kingkong (Dance performance like all Tamil Leading Actors). Mr. Senthil and Mr. Kingkong made entire auditorium burst into laughter.

Mr. Gokulnath (Variety, Dance performance) people were amazed about Mr. Gokulnath's variety. Mr. Gokulnath was supposed to come with his partner due to some reason that was dropped out but Mr. Gokulnath requested one dancer from UTS. Mr. Gokulnath selected Ms. Swetha to perform with him, he had given training to Ms. Swetha just for 1 hour. Both got big applause from the audience.

Then came the real heroes. Mr. Lawrence's Dance team did 3 songs. They were an unbelievable dance performances. Dancing without legs is unimaginable. 70% of the audience started crying after seeing Mr. Lawrence dance teams performance. The entire team got standing ovation from the entire auditorium. During Mr. Lawrence speech in CD he mentioned the entire team is flying 1st time in Flight/outside India, he thanked Ramesh and entire UTS Team.

As we mentioned UTS decided to give stage for more people so the 3rd & 4th anchor (Mr. Guna, Mrs. Anusha) was replaced by Mr. Hari, Mr. Arun Kumar.

The show ended with Vandhe Madharam song was sung by Mr. Karthi (Al Noor student).

Vote of thanks Mr. Swaminathan.

There was a raffle draw conducted by UAE Tamil Sangam. The amount which was received from the raffle draw was given to Lawrence Team.

Mr. K Kumar and Mrs. Uma gave contribution to Lawrence Charitable Trust.

For the entire dance team from India, gift sponsored and given by Thiagararjar College of Engineering - Madurai (UAE Chapter) thanks to Mr. Siva and Team.

For the entire UTS dance team memento was given by Mr. K Kumar (ICWC), Mr. Narayanan (Bank of Baroda), Dr. Narayanan.

Special thanks to Mrs. Sreeganga, Mr. Propser, Mrs. Chitra Propser, Mr. Swaminathan, Mrs. Geetha Swaminathan, Mr. Senthil Velan, Mr. Guna, Mr. Shoban Babu, Mrs. Jamuna Shoban, Mr. Sriram, Mrs. Kamakshi Sriram, Mr. Kathir Vel, Mrs. Geetha Kathirvel, Mr. Balaji Ram, Mrs. Geetha Bala, Mr. Ravi, Mrs. Vijaya Ravi, Mr. Aravind, Mrs. Sowkiya Aravind, Mr. Arun, Mrs. Gokila Arun, Mr. Karthik, Mr. Imran, Mr. Ramkumar, Mr. Balu, Mr. Salahuddin, Mr. Sunder Thambi. Special thanks to Mr. Bala Balakumar (Excellent UTS Presentation), Mr. Kannan
(Photograph), Mr. Balaji Detects Crew Cleaning & Security Services L.L.C, Yummy Restaurant

Ramesh Viswanathan captain of UAE Tamil Sangam said from his heart "without my team I am nothing, without my team no U(T)S.

Thanks and Regards
Lawerance Prabhu