சுத்தம் சுகம் தரும். [CLEAN UP THE WORLD CAMPAIGN 2010<<Back

தூய்மை எனும் நம் தமிழ் சொல் தன்னை அழகு, அமைதி, ஆரோக்கியம் என பல வகைகளில் மெருகேற்றுகிறது. சுத்தத்தின் அவசியம் அறிந்து, நமது யுஏஇ தமிழ்ச்சங்கம் ஆற்றிய ஒரு நிகழ்வின் பதிவே இது.

துபாய் முனிசிபாலிட்டி, யுஏஇ தமிழ்ச்சங்கம்,
Zenath Recycling & Waste Management மற்றும் மலையாள சங்கமும் இனைந்து அக்டோபர் மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மிக பிரம்மானடமான CLEAN UP THE WORLD CAMPAIGN 2010 என்ற நிகழ்ச்சியை வெகு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு துவங்கி மதியம் 12:00 மணிக்கு முடிவடைந்த்து. இதில் சுமார் 15,000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

யுஏஇ தமிழ்ச்சங்கம் சார்பாக சுமார் 400 க்கும் மேற்ப்பட்டோர் நடந்த Clean up the World Campaign 2010 ல் கலந்து கொண்டது மிக சிறப்பாகவும், பெருமையாகவும் இருந்தது மேலும் அன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் வந்த மக்களில் அதிக குடும்பமாக (கனவன், மனைவி, குழைந்தகள்) வந்தது யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் தான் என்பதில் யுஏஇ தமிழ்ச்சங்கம் மிகவும் பெருமை அடைகிறது. 29-10-2010 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 மாத மழலையும் (ஜொனார்தன் பிராஸ்பர்) கலந்து கொண்டது நெகிழ்ச்சியின் உயரம்.

பங்கு பெற்ற அனைவருக்கும் துபாய் முனிசிபாலிட்டி T-Shirt, Cap, Gloves வழங்கியது. அதனுடன் இணைந்து துபாய் முனிசிபாலிட்டி அனைவருக்கும் காலை உனவு மற்றும் குளிர் பானம், தேனீர் வழங்கியது.

துபாய் முனிசிபாலிட்டி நிகழ்ச்சி ஆலோசகர் யுஏஇ தழிழ்ச்சங்கத்தின் பங்கு அளிப்பை பாராட்டி ஒரு நினைவு பரிசையும் வழங்கி, கலந்து கொண்ட அத்துனை குடும்பத்திற்க்கும், குழந்தைகளுக்கும் நன்றி பாராட்டினார். இத்தகைய சீரிய பணியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் மேலும் வருகின்ற துபாய் முனிசிபாலிட்டி நடத்தும் எல்லா நிகழ்ச்சியிலும் யுஏஇ தமிழ்ச்சங்கத்திற்க்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்றும் கூறினார்.

ஒரு கை தட்டினால் ஓசை வருமா, இத்தகைய பெருமையும் வெற்றியும் வாய்த்தது நம் இணைந்த கைகளால். வாரத்தில் ஒரு தினம் மட்டும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை கிடைக்கின்ற போதும் அந்த வெள்ளிக்கிழமையில் உங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து விட்டு துபாய் முனிசிபாலிட்டியும், யுஏஇ தமிழ்ச்சங்கமும் இனைந்து நடத்திய Clean up the World Campaign 2010 க்கு எங்களுடைய அழைப்பை ஏற்று வந்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி.

VIEW PHOTOS

யுஏஇ தமிழ்ச்சங்கம் ரமேஷ்