மற்றும் ஒரு மணி மகுடம் UAE தமிழ்ச் சங்கத்தின் வெற்றிப் பாதையில்.    { Back }

டிசம்பர் 3,2010 ஒரு மறக்க முடியாத மாலையாக அமைந்தது எனலாம். அமீரகத்தின் தேசிய நாள் கொண்டாட்டம் அரசாங்கத்தின் மற்றும் அல்- அஹ்லி கிளப்பின் சார்பிலும் நடத்தப்பட்டது. இந்த விழாவை நடத்தி தருமாறு UAE தமிழ்ச் சங்கத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு, தமிழ்ச் சங்கத்தின் ஒப்புதல் பேரின் வெற்றி கரமாக நடத்தப் பட்டது.

பல் சுவை நிகழ்ச்சிகள் காண்போரை கவர்ந்திழுத்தன.

திருமதி. நேகா சுவாமி நாதன் வரவேற்ப்புரை அளித்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் அமீரக தேசிய கீதம் பாட, சூழ்ந்திருந்தவர் அனைவரும் உணர்ச்சி பெருக்கால் அகமகிழ்ந்தனர்.

திருமதி ஸ்ரீகங்கா ரமேஷ் வடிவமைத்த இந்திய, மேற்கத்திய, அரேபிய நடனங்கள் அந்த மாலை வேளையை இனிமையாக்கியது. அமீரகத்தின் மண்ணின் மைந்தர்களும், ஓமானிய தேசத்து மக்களும், தமிழ்ச் சங்க பிரதி நிதிகளுடன் இணைந்து, நடனங்கள் ஆடி, அணி சேர்த்தனர்.

நிகழ்ச்சியில் திரு.கிஷோர், திரு.பாலாஜி ராம், திரு.கோபி நாத், திரு.வெங்கட் அவர்களின் மெல்லிசை மனதை வருடியது. இது மட்டும் அல்லாது, வேடிக்கை வினோத விளையாட்டுக்களும் ஆங்கிலத்திலும், அரபியிலும் நடத்தப்பட்டு, பாராட்டப்பட்டது.

அல் அஹ்லி கிளப்பின் இயக்குனர் நிகழ்ச்சியில் பேசும் போது, எத்தனையோ ஆண்டுகளாக தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றது. ஆனால் இத்தகைய ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடந்ததில்லை. இதை செய்து தந்த UAE தமிழ்ச் சங்கத்திற்கு தன் நெஞ்சார்ந்த நன்றிகள் என்றார். மேலும் இது போல் பல நிகழ்ச்சிகளை வரும் காலங்களில் அளிப்போம் என உறுதியளித்தார்.

அமீரகத்தில் இங்கனம் நடந்தேறிய ஒரு நிகழ்வு நம் எல்லா தமிழ் நெஞ்சங்களுக்கும் பெருமையே. நாம் வாழும் நாட்டின் மண்ணின் மைந்தர்களிடம் அன்பு பாராட்டுவதும், சகோதரத்துவம் பேணுவதும் நம் தாய் மொழியின் மரபல்லவா.

இந்த வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அத்தனை நல்ல இதயங்களையும் குறிப்பாக திரு. அப்துல்லா மூராத், திரு.சையத் இப்ராகீம் அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு.பிராஸ்பர், திருமதி.சித்ரா பிராஸ்பர், அவர்களின் பெரு முயற்சியால் நடந்த ஒருங்கிணைப்புக்கு நன்றி. திரு. கிறிஸ் அமைத்த அலங்கார வளைவுக்கு பாராட்டுதலும் நன்றிகளும்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஊடகத் தொடர்பில் உறுதுணை செய்த திரு.கமால் பாட்சா அவர்களுக்கு நன்றி, மற்றும் திரு. லாரண்ஸ் பிரபா அவர்களுக்கு நன்றி.

ரமேஷ் விஸ்வநாதன்

----------------------- English

3rd December 2010 was an exciting evening for our UAE Tamil Sangam. UAE National day celebration was arranged by UAE Government Officials (UAE Nationals) and Al Ahli Club Dubai on 3rd December 2010. Al Ahli Club had asked UAE Tamil Sangam to conduct a show for UAE National Day.

From UAE Tamil Sangam (UTS) we had arranged variety programs

1. Welcome speech (speech about UAE National Day ) by Neha Swaminathan
2. This was followed by recital of UAE National Anthem by UTS kids.
3. Indian, Western and Arabic dances were choreographed and organized by UTS dance choreographer Mrs. Sreeganga Ramesh
4. Fusion dances were also organized with UAE Nationals / Omanis and UAE Tamil Sangam team
5. Light music was conducted by Mr. Kishore, Mr. Balajiram, Mr. Gopinath, Mr. Venkat (UTS member) thanks to Mr. Suresh & Mr. Zakir
6. Games (English and Arabic) were organized and prizes were distributed by Al Ahli club.

The Director of Al Ahli club in his speech mentioned that in so many years they have never celebrated UAE National day with Indians. He said that UTS had made it an unforgettable evening for them. They were very impressed with UTS Cultural Fusion 2010. Al Ahli Director and Senior Government Official gave a Memento to UTS and said this is just a starting soon to have lot of events with UTS.

We are proud to say UAE Tamil Sangam got a great chance to celebrate UAE National Day with top level Government Officials in Al Ahli club and we did our best to entertain them and successfully did so.

Thanks to Mr. Abdullah Murad / Mr. Syed Ibrahim for giving us this opportunity.

Special thanks to Mr. Prosper & Mrs. Chitra Prosper for helping us organize this event and to Mr. Chris for the innovative banner.

We would also like to thank all the UTS Members who participated and who participated in the cultural events and to all those who attended the great evening and made it a grand success. Thanks to Mr. Kamal Batcha (Media Support), Special thanks to Mr. Lawrence Prabhu.

Thanks and Regards
UAE Tamil Sangam